Editorial / 2019 மார்ச் 06 , பி.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

இஸ்லாமிய ஆயுததாரிக் குழுக்கள் மீதான நடவடிக்கையொன்றைத் தாம் ஆரம்பித்ததாக நேற்று தெரிவித்த பாகிஸ்தான், தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் 44 உறுப்பினர்களைக் கைதுசெய்துள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களுக்குள், இந்தியாவின் ஆளுகைக்குட்பட்ட காஷ்மிரில் கடந்த மாதம் குண்டுத் தாக்குதலொன்றை நடத்தியதாகச் சாடப்படும் ஜைஷ்-ஈ-மொஹமட் குழுவின் தலைவர் மசூட் அஸாரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர். முப்தி அப்துல், ஹமாட் அஸார் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டமைச்சு தெரிவித்துள்ள நிலையில், மசூட் அஸாரின் மகனே ஹமாட் அஸார் என குறித்த அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, லக்ஷர் ஈ தொய்பாவின் நிறுவுநரான ஹபீஸ் சயீட்டுடன் தொடர்புடைய ஜமாத்-உட்தவா, பாலா-ஈ-இன்ஸனிடாட் ஆகிய தொண்டு நிறுவனங்கள் இரண்டையும் தமது உத்தியோகபூர்வ தடை செய்யப்பட்ட பட்டியலில் பாகிஸ்தான் நேற்று சேர்த்திருந்தது.
இந்நிலையில், கடந்த மாத குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்ஹானுக்கு அளித்த ஆவணத்தில் பெயரிடப்பட்ட சிலரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு செயலாளர் அஸாம் சுலெய்மான் தெரிவித்துள்ளார்.
36 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago