Freelancer / 2026 மார்ச் 24 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் ஆரம்பமானது முதல், ஈரான் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்த அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்களை அமெரிக்க மத்திய கட்டளையகம் வெளியிட்டுள்ளது.
இதன்படி ஈரானுக்குள் சுமார் 9,000 இற்கும் மேற்பட்ட இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
இதற்கமைய ஈரானுக்குச் சொந்தமான 140 கப்பல்கள் மற்றும் படகுகள் சேதமாக்கப்பட்டுள்ளன அல்லது முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான மோதல்களை நிறுத்துவதற்குப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், கள நிலவரம் வேறாக இருப்பதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (a)

13 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
2 hours ago