Freelancer / 2024 செப்டெம்பர் 25 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

'ஈரானால் என் உயிருக்கு பெரிய அச்சுறுத்தல் உள்ளது” என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த ஜூலை 13ஆம் திகதி பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது.
இதன்போது, காது பகுதியில் இலேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக டிரம்ப் உயிர் தப்பினார். கடந்த செப்டம்பர் 16ஆம் திகதி, 2ஆவது முறையாக புளோரிடா மாகாணத்தில் தனது வீட்டில் இருக்கும் கோல்ப் மைதானத்தில் டிரம்ப் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவர் வீட்டிற்கு அருகிலேயே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது.
இந்நிலையில், அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'ஈரானால் எனது உயிருக்கு பெரிய அச்சுறுத்தல். ஏற்கனவே அவர்கள் மேற்கொண்ட முயற்சி கை கொடுக்கவில்லை. ஆனால் மீண்டும் முயல்வர். ஒட்டுமொத்த அமெரிக்க இராணுவமும் பார்த்துக்கொண்டு காத்திருக்கிறது. யாருக்கும் நல்ல சூழ்நிலை இல்லை. இதுவரை நான் பார்க்காத அளவுக்கு என்னைச் சுற்றி துப்பாக்கிகளும், ஆயுதங்களும் உள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.S
7 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago