Freelancer / 2026 மார்ச் 07 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரான் கடற்படையின் ட்ரோன் ஏவும் கப்பல் உட்பட 30 இற்கும் மேற்பட்ட கப்பல்களை தகர்த்ததாகவும், கடந்த 72 மணி நேரத்தில் ஈரானில் 200 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராணுவ கமாண்டர் அட்மிரல் பிராட் கூபர் , பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்சேத் ஆகியோர் புளோரிடாவில் நேற்று அளித்த பேட்டியில், ஈரான் கடற்படையை ஒட்டு மொத்தமாக அழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்க படைகள் ஈடுபட்டுள்ளன.
ஈரானின்மிகப் பெரிய ட்ரோன் ஏவும் போர்க்கப்பலை நேற்று தகர்த்தோம். அது தற்போது எரிந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியதில் இருந்து இதுவரை 30 இற்கும் மேற்பட்ட ஈரான் போர்க்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.
கடந்த 72 மணி நேரத்தில், ஈரானின் சுமார் 200 இலக்குகள் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. பூமிக்கு அடியில் ஈரான் அமைத்துள்ள ஏவுகணை தளங்கள் மீது, அமெரிக்காவின் பி-2 குண்டு வீச்சு விமானங்கள் 2,000 பவுண்ட் எடையுள்ள பல குண்டுகளை போட்டுள்ளன.
இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் 90 சதவீதம் குறைந்துள்ளது, ட்ரோன் தாக்குதல் 83 சதவீதம் குறைந்துள்ளது. வரும் நாட்களில் ஈரான் மீதான விமான தாக்குதல் தீவிரமடையும் என்று கூறினர். (a)

3 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago