S.Renuka / 2026 மார்ச் 04 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

யதுல்லா அலி கமேனியின் மகன் முஜ்தபா கமேனி
........................................
ஈரான் பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்படும் ஒவ்வொரு தலைவரும், யாராக இருந்தாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என புதிய ஆட்சியாளருக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் கமேனி கொல்லப்பட்ட நிலையில், அவரது மகன் மொஜ்தபா, ஈரான் புதிய ஆட்சியாளர் மற்றும் மத குருவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் காட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இஸ்ரேலை அழிக்கவும், அமெரிக்காவையும், உலகத்தையும், பிராந்திய நாடுகளையும் அச்சுறுத்தல் விடுக்க முடியாது. ஈரான் மக்களை அடக்கவும், திட்டத்தைத் தொடரவும், வழிநடத்தவும் ஈரான்
பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு தலைவரும் ஒழிக்கப்பட வேண்டிய இலக்காக இருப்பார்கள்.
ஈரான் மக்கள் ஆட்சியைத் தூக்கியெறிந்து அதை மாற்றுவதற்கான நிலைமைகளை உருவாக்குவதற்கும், ஆட்சியை அகற்றுவதற்கும், எங்கள் அமெரிக்க கூட்டாளிகளுடன் சேர்ந்து, முழு பலத்துடன் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம் என கூறியுள்ளார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago