2025 நவம்பர் 05, புதன்கிழமை

ஈரானில் வெள்ளத்தால் 19 பேர் கொல்லப்பட்டனர்

Editorial   / 2019 மார்ச் 27 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானில் வெள்ளத்தால் 19 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், வீதிகள் முடங்கியுள்ளதுடன், நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளநிலையில், மேலும் கன மழை பெய்யும் என அவசர சேவைகள் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளன.

தென் நகரான ஷிராஸில் 17 பேர் கொல்லப்பட்டுடன் 94 பேர் காயமடைந்தநிலையில், மேற்கு மாகாணமான கெர்மன்ஷாவில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், இன்னொரு மேற்கு மாகாணமான லொரெஸ்டானில் இன்னொருவர் கொல்லப்பட்டதாக மீட்புச் சேவைகள் தெரிவித்துள்ளன. தங்களது கார்களில் விடுமுறையை கழிப்பதற்காக ஷிராஸுக்குள் சென்ற பலரே வெள்ளத்தில் சிக்குண்டு கொல்லப்பட்டுள்ளனர்.

அந்தவகையில், ஈரானின் 31 மாகாணங்களில் 25 மாகாணங்களை வெள்ளத்தை அல்லது உடனடி வெள்ள அபாயத்தை எதிர்கொண்டுள்ளநிலையில், அமைச்சரவை மட்டத்தில் ஈரானின் தேசிய நெருக்கடி முகாமைத்துவ செயற்குழு செயற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபத்தை அறிக்கையொன்றை வெளிப்படுத்திய ஈரான் ஜனாதிபதி ஹஸன் றொஹானி, நெருக்கடியில் அவர்களின் பதிலளிப்புக்காக அவசர சேவைகளுக்கும், இராணுவத்துக்கும் நன்றியைத் தெரிவித்ததுடன், ஷிராஸில் ஏற்பட்ட உயர்வான உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்பான காரணங்களுக்காக உடனடியான விசாரணையொன்றுக்கு,ம் வலியுறுத்தியுள்ளார்.

முன்னர் பொதுவெளியில் தோன்றியிருக்காத ஜனாதிபதி ஹஸன் றொஹானி, வெள்ளத்துக்குப் பின்னர் பாதுக்கப்பட்ட இடங்களுக்கு உப ஜனாதிபதிகளுடனும், அமைச்சர்களுடனும் சென்றிருந்தார்.

இந்நிலையில், இன்று வரை கடும்மழை பெய்யும் என ஈரானின் வானிலைச் சேவை எச்சரித்ததுடன், சில மேற்கு மாகாணங்களில் 15 சென்டி மீட்டர் அளவிலான மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X