Editorial / 2019 டிசெம்பர் 16 , பி.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஈரானில் கடந்த மாதம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரான மூன்று நாட்கள் அடக்குமுறையின்போது குறைந்தது 304 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை இன்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, 15 வயதான, 17 வயதான இரண்டு சிறுவர்கள் உள்ளடங்கலாக 208 பேர் கொல்லப்பட்டதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட மன்னிப்புச் சபை மதிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த எண்ணிக்கைகளை அப்பட்டமான பொய்கள் என ஈரான் நிராகரித்துள்ளது.
தேசியளவிலான ஆர்ப்பாட்டங்கள் கடந்த மாதம் 15ஆம் திகதி பரவியதையடுத்து மோசமான அடக்குமுறையை ஈரான் அதிகாரிகள் மேற்கொண்டதாக அறிக்கையொன்றில் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
ஈரானின் மோசமான அடக்குமுறை குறித்து பேசுவதைத் தடுப்பதற்காக ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களும், ஊடகவியலாளர்களும், மனித உரிமைகள் காப்பாளர்களும், மாணவர்களும் கைது செய்யப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது.
அதிர்ச்சிகரமான எரிபொருள் விலை உயர்வொன்றினாலேயே தேசியளவிலான ஆர்ப்பாட்டங்கள் வெடித்திருந்தன.
இந்நிலையில், சில நாட்களுக்குள்ளேயே ஒழுங்கை அதிகாரிகள் மீளக் கொண்டு வந்த போதும், கலகக்காரர்களால் கொல்லப்பட்ட பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்கள் நால்வர் உட்பட ஐந்து இறப்புகளையே இதுவரையில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, அடக்குமுறை இடம்பெற்ற ஒரு மாதத்தைத் தொடர்ந்தும் ஈரான் முழுவதும் மக்களைக் கைது செய்வதற்காக அவர்களது வீடுகளிலும், அலுவலகங்களிலும் பாதுகாப்புப் படைகள் தேடுதல்களை இன்னும் நடாத்துவதாக சர்வதேச மன்னிப்புச் சபைக்கு சுயாதீன தகவல்மூலங்கள் தெரிவித்துள்ளன. வயது வந்தோருடன் 15 வயதான சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது.
18 minute ago
43 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
43 minute ago
49 minute ago