Editorial / 2018 மே 07 , மு.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சன், ஈரானுக்கும் வல்லரசு நாடுகளுக்கும் இடையிலான அணுவாயுத ஒப்பந்தத்தைப் பாதுகாப்பதற்கான இறுதிக்கட்ட முயற்சியை மேற்கொண்டு, ஐக்கிய அமெரிக்காவுக்குப் பயணமாகியுள்ளார்.
ஐக்கிய இராச்சியத்திலிருந்து நேற்றுப் புறப்பட்ட அவர், இன்றைய தினம் (07), முக்கியமான சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு நீடிக்கவுள்ள இவ்விஜயத்தின் போது, உப ஜனாதிபதி மைக் பென்ஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்ட்டன் ஆகியோரைச் சந்திக்கவுள்ள அவர், ஈரான், வடகொரியா, சிரியா ஆகிய விடயங்களை மையப்படுத்திய கலந்துரையாடல்களில் ஈடுபடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவது குறித்து, ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆராய்ந்து வரும் நிலையில், அவ்வாறு வெளியேறாமல் தடுப்பதற்கான முயற்சியாகவே, இவ்விஜயம் பார்க்கப்படுகிறது.
இதில் குறிப்பாக, ஜனாதிபதி ட்ரம்ப்புடன் தனிப்பட்ட ரீதியில் நெருக்கத்தைக் கொண்டவரான பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், தனது விஜயத்தின் போதும், ஜனாதிபதி ட்ரம்ப்பைச் சம்மதிக்க வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் அதிக நம்பிக்கையுடன் காணப்பட்ட ஜனாதிபதி மக்ரோன், ஆனால் அதன் பின்னர், இவ்விடயத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் என்ன முடிவெடுப்பார் எனத் தெரியவில்லை என ஏற்றுக் கொண்டார்.
எனவே, பொரிஸ் ஜோன்சனின் விஜயத்தால் என்ன நடக்குமென்ற எதிர்பார்ப்பு, இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது.
35 minute ago
56 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
56 minute ago
9 hours ago