2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உக்ரேனியர்களுக்கு ரஷ்யாவில் குடியுரிமை?

Ilango Bharathy   / 2022 ஜூலை 20 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}



உக்ரேனின் கிழக்குப் பகுதியான டான்பாஸை ரஷ்ய இராணுவ படைகள் முழுவதுமாக சுகந்திர பகுதிகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உக்ரேனில் ரஷ்ய இராணுவ படைகள்  கைப்பற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களை ரஷ்ய குடிமக்களாக மாற்றும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக உக்ரேனின் டொனெட்ஸ்க்  மற்றும் லுகான்ஸ்க்  பகுதிகளில் வாழ்கின்ற  மக்கள் ரஷ்யாவில் வசிப்பதற்கும், வேலை செய்வதற்கும், ஆவணங்களை பெறுவதற்கும் கைரேகை, புகைப்படம் மற்றும் கேள்விகளுக்கு உட்படுத்தப்படுவர் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

எனினும்  விண்ணப்பதாரர்களிடம் அனைத்து அடையாள ஆவணங்களும் இல்லாத சந்தர்ப்பங்களில், அவர்களுக்கு உதவ பல்வேறு நடவடிக்கைகளை ரஷ்யா முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .