2026 மே 14, வியாழக்கிழமை

dd

உக்ரேனுக்குள் படைகளைச் செல்ல உத்தரவிட்ட புட்டின்

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 23 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு உக்ரேனிலுள்ள பிரிந்த இரண்டு பிராந்தியங்களான டொனெஸ்டெக், லுகன்ஸ்க்க்கு படைகளைத் தரையிறக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளார். இரண்டு பிராந்தியங்களையும் நேற்று முன்தினம் அங்கிகரித்ததைத் தொடர்ந்தே இந்நடவடிக்கையை ஜனாதிபதி புட்டின் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், டொனெஸ்டெக்குக்குள் தாங்கிகளும், ஏனைய இராணுவ உபகரணங்களும் நகர்வது அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பையடுத்து குறித்த இரண்டு பிராந்தியங்களிலும் ஐக்கிய அமெரிக்க வர்த்தகச் செயற்பாடுகளை இடைநிறுத்த, அங்கிருந்தான அனைத்துப் பொருள்களையும் இறக்குமதி செய்வதற்கான தடையை ஐக்கிய அமெரிக்கா விதித்துள்ளது.

இந்நிலையில், இதற்கு பதிலளிக்க பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனியும் இணங்கியுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .