2025 ஒக்டோபர் 17, வெள்ளிக்கிழமை

உக்ரேன் யுத்தத்தில் இரு தரப்பும் நிலத்தை விட வேண்டும்: ட்ரம்ப்

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 12 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேனில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உக்ரேனும், ரஷ்யாவும் நிலத்தை விட்டுக் கொடுக்க வேண்டுமென திங்கட்கிழமை (11) தெரிவித்த ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான பேச்சுக்களின்போது ஜனாதிபதி புட்டின் ஒப்பந்தத்தை மேற்கொள்ளத் தயாராக இருக்கின்றாரா என்பதை உடனடியாகக் காட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஐ. அமெரிக்காவின் அலாஸ்காவில் புட்டினை வெள்ளிக்கிழமை (15) ஜனாதிபதி ட்ரம்ப் சந்திப்பதற்கு முன்பாக ஐரோப்பியத் தலைவர்களும், உக்ரேனிய ஜனாதிபதி வொலடீமர் ஸிலென்ஸ்கியும் ட்ரம்புடன் கதைப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .