Freelancer / 2022 பெப்ரவரி 25 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரைனில் உள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர துருக்கியின் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம் ஒருங்கிணைந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முழுமையான தகவல்களுக்கு 24 மணிநேரமும் செயற்படக்கூடிய தொலைபேசி இலக்கங்களும் தரப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
+90-534-456-9498,
+90-312-427-1032
இதேவேளை, உக்ரைனில் வசிக்கும் 14 மாணவர்கள் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யும் நோக்கில் துருக்கியின் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம் நெருங்கிய தொடர்பில் உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. (R)
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago