2026 மே 14, வியாழக்கிழமை

dd

உக்ரைன் எல்லைக்கு அருகில் ரஷ்ய படைகள் அதிகரிப்பு

Freelancer   / 2022 பெப்ரவரி 23 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரைன் எல்லைக்கு அருகில் ரஷ்ய படைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதை செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான மேக்சர் தொழில்நுட்ப நிறுவனம் சில செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டுள்ளது.

தெற்கு பெலாரஸில் 100க்கும் அதிகமான ராணுவ வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பகுதிகள் அனைத்தும், உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ளவையாகும். சமீப நாட்களாக ரஷ்யா மற்றும் பெலாரஸ் இணைந்து விரிவான இராணுவ பயிற்சிகளை மேற்கொண்டது.

ஆனால், இந்த புகைப்படங்கள் குறித்து ரஷ்யா மற்றும் பெலாரூஸ் ஆகிய நாடுகள் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .