Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Ilango Bharathy / 2022 மே 03 , பி.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவின் செஸ்டர் நகரில் வசித்து வருபவர் லாரன் ஈவன்ஸ்.
2 குழந்தைகளுக்குத் தாயான இவர், தனது உதடுகள் அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காக பில்லரைப் பயன்படுத்தி வந்துள்ளார்.(பில்லர் என்படுவது உதடுகள் சற்று பெரிதாகத் தெரிவதற்காக, செலுத்தப்படும் ஊசியாகும் )
இந்நிலையில் நாட்கள் செல்லச் செல்ல லாரனின் உதடுகள் பெரிதாகிக் கொண்டே சென்றுள்ளன. அத்துடன் அவரது பெரிய உதடுகள் காரணமாக அவர் சுவாசிக்கவும், பேசுவதற்கும் கஷ்டப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அச்சமடைந்த அவர் உடனடியாக மருத்துவரை நாடியுள்ள நிலையில் அங்கு அவருக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி லாரன் கூறும்போது, ”பபூன் குரங்கின் பின்புறம் இருப்பது போல் எனது உதடுகள் இயல்பை விட 6 மடங்கு பெரிதாகி விட்டன. இதனால் எனது உதடுகளில் அதிகளவு வலியை நான் உணர்கின்றேன்” என்றார்.
இந்நிலையில் இது குறித்து வைத்தியர்கள் கருத்துத் தெரிவிக்கையில்”உதடுகளில் ஊசி செலுத்தப்படுவதால் சற்று வலி ஏற்படும். ஆனால் அவ் வலியினைத் தாங்கிகொள்ள முடியும். எனினும் ஒரு சிலருக்கு இது ஒவ்வாமையை ஏற்படுத்தி விடும்.
இதுபோன்ற ஒவ்வாமை இருப்பவர்கள் பில்லர்களைத் தவிர்க்க வேண்டும் ” என்றனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .