2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

உயிரைப் பறிக்கும் தோட்டம்

Ilango Bharathy   / 2022 ஜூலை 12 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
 
பிரித்தானியாவில் நார்தம்பர்லேண்ட் கவுண்டியில் உள்ள ஆல்ன்விக் என்ற பகுதியில் poison garden என அழைக்கப்படும் உலகின் மிகக் கொடிய, ஆபத்தான தோட்டமொன்று அமைத்துள்ளது. 
 
இத் தோட்டத்தில் கண்ணை கவரும் வகையில் ஏராளமான செடிகள் வளர்க்கப்பட்டு வருவதோடு, மனிதர்களைக் கொல்லக் கூடிய 100 க்கும் மேற்பட்ட விஷச் செடிகளும் வளர்க்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதன் காரணமாக இங்கு வளரும் செடிகளை சுற்றிப் பார்க்க வருபவர்கள் யாரும் அவற்றை தொடவோ, நுகர்ந்து பார்க்கவோ உண்ணவோ கூடாது எனவும் அதையும் மீறி செய்தால் இறந்து போவது உறுதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் இத் தோட்டத்தின் நுழைவாயில் எலும்புக்கூடு பொறிக்கப்பட்ட பலகையும் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .