Ilango Bharathy / 2022 பெப்ரவரி 01 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி அமெரிக்காவின் தென் பகுதி வானில் வெளிப்பட்ட ஒரு மின்னலின் பதிவு புதிய உலக சாதனை படைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இம்மின்னலானது அமெரிக்காவின் மிசிசிப்பி, லூசியானா மற்றும் டெக்சாஸ் முழுவதும் மொத்தம் 770 கிலோமீற்றர் தூரம் தெரிந்ததாகவும் ஐ.நாவின் உலக வானிலை அமைப்பு ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இது பிரித்தானியாவின் லண்டன் நகரில் இருந்து ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரம் வரை உள்ள தூரத்திற்கு சமமானது என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதியன்று தெற்கு பிரேசில் பகுதியில் பதிவான ஒரு மின்னலின் தூரத்தை விட 60 கிலோமீற்றர்கள் அதிகமாக அமெரிக்க மின்னல் பதிவாகி உள்ளமை குறிப்படத்தக்கது.
இது இயற்கை நிகழ்வுகளின் அசாதாரண பதிவுகள் என ஐ.நா.வானிலை மற்றும் கால நிலை அதிகாரி ராண்டால் செர்வெனி தெரிவித்துள்ளார்.
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago