Freelancer / 2022 பெப்ரவரி 23 , பி.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊடகவியலாளர்களுக்கு, உலகிலுள்ள மிகவும் ஆபத்தான நாடாக பாகிஸ்தான் மாறியுள்ளது என்று பாகிஸ்தானின் மூத்த ஊடகவியலாளர் ஹமீத் மிர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் மூசா கான்கேலின் 13ஆவது நினைவு தினகூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் உண்மைகளை வெளிப்படுத்துவதற்கும் பொதுப் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்துவதற்கும் எழுத்தாளர்களைப் பாதுகாக்க அரச இயந்திரம் தவறிவிட்டது என்றும் குறிப்பிட்டார்.
அரசாங்கம் உண்மைச் செய்திகளை விரும்பவில்லை எனவும் ஊடகங்களில் தனக்கு ஆதரவாக செய்திகளை மட்டுமே விரும்புகிறது எனவும் மிர் கூறினார்.
மூசா கான்கேலின் நினைவு தினத்தை ஊடகவியலாளர் சமூகம் அனுஷ்டித்துக் கொண்டிருந்தபோது, கராச்சியில் மற்றொரு ஊடகவியலாளர் அதர் மதின் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஹமீத் மிர் கூறியுள்ளார் என, டான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு, மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியவை பாகிஸ்தான் அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் மீது அதிகரித்து வரும் அழுத்தம் குறித்து கவலை தெரிவித்தன.
சமீபத்தில் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து, பாரபட்சமற்ற மற்றும் பயனுள்ள உடனடி விசாரணையை பாகிஸ்தான் அரசாங்கம், நடத்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
அதிகாரிகளை விமர்சனங்களிலிருந்து பாதுகாக்கும் உத்தியோகபூர்வ கொள்கைகளை அரசாங்கம் இரத்து செய்ய வேண்டும் என்றும் அதற்கு பதிலாக பொது விவாதம் மற்றும் சுதந்திரமான கருத்து வெளிப்பாட்டுக்கான இடத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago