Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 28 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் ஜெர்மன் ஷெப்பர்டு இனத்தை சேர்ந்த நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படை ஊழியரை நாய் கடித்துள்ளது. உடனடியாக அந்த பாதுகாவலருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் தற்போது நலமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளை மாளிகைக்கு இந்த நாய் வந்தது முதல் 2022-ம் ஆண்டு நவம்பர் வரை 10 முறை இது போன்று பாதுகாவலர்களை கடித்துள்ளது. இந்நிலையில் 11-வது முறையாக ஒரு பாதுகாப்பு ஊழியரை கடித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago