Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Ilango Bharathy / 2022 டிசெம்பர் 14 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருமணம் செய்யாமல் தனியாக வாழ்பவர்களின் எண்ணிக்கை தென்கொரியாவில் அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தென்கொரியாவின் கடந்த 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி 5இல் 2 பேர் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2000 ஆம் ஆண்டில் 15.5 % மக்கள் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக இருந்துள்ளனர். தற்போது இவ் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் 2050ஆம் ஆண்டில் இது 40 சதவீதமாக உயரும் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் வேலை பாதுகாப்பு இல்லாமை , நிதி சுதந்திரம் இது போன்ற காரணங்களால் குழந்தையும் வேண்டாம் திருமணமும் வேண்டாம் என தென்கொரிய இளைய சமுதாயம் செல்வதாக கூறப்படுகின்றது.
மேலும் தரவுகளின்படி தென்கொரியாவில் 12 சதவீத மக்கள் குழந்தை வளர்ப்பை பெரிய சுமையாக கருதுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது 25 சதவீத மக்கள் ”தங்களுக்கு சரியான ஜோடி கிடைக்கவில்லை, ஆகவே திருமணம் செய்து கொள்ளவில்லை” எனக் கூறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ” இப்போதைக்கு எங்களுக்கு கல்யாணமே வேண்டாம் என தென்கொரியாவில் பலர் கூறினாலும், அது நாட்டின் பிறப்பு விகிதத்தை குறைக்கும் என்பதால் இந்நிலை மாறவேண்டும் என சர்வதேச வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
5 hours ago
9 hours ago
01 May 2025