2026 மே 07, வியாழக்கிழமை

எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலையில் தீ: 100 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 24 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு நைஜீரியாவில்,இமோ மாகாணத்தில் இயங்கி வந்த சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்ததில் 100 பேர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 22 ஆம் திகதி நள்ளிரவு இடம்பெற்ற இத் தீவிபத்தில், உயிரிழந்தவர்களின் உடல்கள் வீதிகளிலும், மரக்கிளைகளிலும் சிதறிக் கிடப்பதாக அந்நாட்டுப் பொலிஸார்  தெரிவித்தனர்.

மேலும் திருட்டுக் கும்பல்கள் எண்ணெய்யை களவாட குழாய்களை உடைத்திருக்கலாம் என்றும் அதன் மூலம் இத் தீவிபத்து  இடம்பெற்று இருக்கலாம்  எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .