Editorial / 2018 மே 18 , மு.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

கர்நாடகத்தின் முதலமைச்சராக, பாரதிய ஜனதா கட்சியின் எடியூரப்பா, நேற்று (17) காலையில் பதவியேற்றுக் கொண்டார். காங்கிரஸ், ஜனதா தளம் (மதசார்பற்ற) உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியிலேயே, இப்பதவியேற்பு இடம்பெற்றது.
கர்நாடகாவில் இடம்பெற்ற தேர்தலில், எக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தனிப்பெரும் கட்சியான பா.ஜ.கவின் சட்டமன்றக் குழுத் தலைவர் எடியூரப்பாவை, பதவியேற்க வருமாறு, ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார்.
இதைத் தொடர்ந்தே, நேற்றுக் காலையில், கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளின் மத்தியில், 75 வயதான எடியூரப்பா பதவியேற்றார்.
ஆனால் அவரது பதவியேற்பு, சர்ச்சைகளுக்கு மத்தியிலேயே இடம்பெற்றது.
கர்நாடகாவில், தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க உள்ள போதிலும், தேர்தலில் தனித்தனியாகப் போட்டியிட்ட காங்கிரஸும் ஜனதா தளமும், தேர்தலுக்குப் பின்னர், இணைந்து ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பைக் கோரியிருந்தன. எனினும், தனிப்பெரும் கட்சிக்கே முதலாவது வாய்ப்பை வழங்கும் நோக்கில், பா.ஜ.கவுக்கான அழைப்பை, ஆளுநர் விடுத்தார்.
பா.ஜ.கவின் பெரும்பான்மைய நிரூபிக்க, அக்கட்சிக்கு 15 நாட்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் விலைக்கு வாங்கப்படுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸைச் சேர்ந்த 2 உறுப்பினர்கள், ஏற்கெனவே பா.ஜ.கவின் பக்கம் சாய்ந்துவிட்டனர் என்று கருதப்படுகிறது.
இதனால், ஆளுநரின் இவ்வறிவிப்பு எதிராக, இரவோடிரவாக, உச்சநீதிமன்றத்தை, காங்கிரஸ் நாடியிருந்தது. ஆனாலும், பதவியேற்புக்குத் தடை விதிப்பதற்கு, உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதனால், நேற்றைய பதவியேற்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, காங்கிரஸ், ஜனதா தள தலைவர்கள், வீதியோரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
34 minute ago
55 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
55 minute ago
9 hours ago