2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

’ஏக்கம், உறவு உள்ளவர்கள் நினைவையாவது ஏந்துவார்கள்’

Editorial   / 2018 மே 20 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

"ஏக்கம், உறவு உள்ளவர்கள் நினைவையாவது ஏந்துவார்கள்" என மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக, நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்றை சென்னை மெரினா கடற்கரையில் நடத்துவதற்கு சில பொது அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், தமிழக உளவுப் பிரிவு பொலிஸ் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

“நினைவேந்தல் நிகழ்வினை பெரும்பாலான அமைப்பினர் அனுமதிக்கப்பட்ட இடங்களிலும் உள்ளரங்குகளிலும் நடத்திய போதும் சில அமைப்புகள், பொதுமக்கள் கூடும் மெரினாவில் கூடுவதாக அறிவித்துள்ளன. எனவே, யாரும் போராட்டம் என்ற பெயரில் மெரினாவில் தடையை மீறி கூடி பொது மக்களுக்கு இடையூறு செய்யவேண்டாம். மீறி போராட்டம், ஆர்ப்பாட்டம், நினைவேந்தல் என்ற பெயரில் ஒன்று கூடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அவர், ''அது பொலிஸாரின் எச்சரிக்கை. ஏக்கம், உறவு உள்ளவர்கள் நினைவையாவது ஏந்துவார்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X