Editorial / 2019 மார்ச் 12 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலிபான்களின் முன்னாள் தலைவரான முல்லா மொஹமட் ஓமர், ஆப்கானிஸ்தானிலுள்ள ஐக்கிய அமெரிக்க தளங்களுக்கருகில் வசித்திருந்ததாக, பெட்டே டாமின் த சீக்கிரட் லைஃவ் ஒஃவ் முல்லா ஓமர் புத்தகம் வெளிப்படுத்தியுள்ளது.
ஐக்கிய அமெரிக்காவால் நம்பப்பட்டது போல, பாகிஸ்தானில் எப்போதும் தலிபான்களின் நிறுவுநரான முல்லா ஓமர் ஒழிந்திருக்கவில்லை என நெதர்லாந்து ஊடகவியலாளரான பெட்டே டாமின் குறித்த புத்தகம் வெளிப்படுத்தியுள்ளது.
தனது சொந்த மாகாணமான ஸாபூலிலுள்ள பிரதான ஐக்கிய அமெரிக்க முன்னரங்கு இயங்கு தளமொன்றிலிருந்து மூன்று மைல்கள் தூரத்திலேயே முல்லா ஓமர் வசித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது குறித்த புத்தகத்துக்காக ஐந்து ஆண்டுகளாக ஆராய்ச்சியிலும் தலிபான் உறுப்பினர்களை நேர்கண்டும் இருந்திருந்த பெட்டே டாம், 2001ஆம் ஆண்டு தலிபான் அரசாங்கம் வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, மறைவு வாழ்கைக்கு முல்லா ஓமர் சென்றதிலிருந்து அவரின் பாதுகாவலராக இருந்திருத ஜபார் ஓமாரியுடனும் பேசியிருந்தார்.
2013ஆம் ஆண்டு நோயால் முல்லா ஓமர் இறக்கும் வரையில், அவரை ஜபார் ஓமாரி மறைத்து வைத்திருந்துள்ளார்.
செப்டெம்பர் 11 தாக்குதல்களைத் தொடர்ந்து, முல்லா ஓமரின் தலைக்கு 10 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை, ஐக்கிய அமெரிக்கா நிர்ணயித்தியிருந்த நிலையில், தலிபான் அரசாங்கம் வீழ்ச்சியடைந்த பின்னர், தளமொன்றுக்கு அருகிலுள்ள வீடொன்றில் இரகசிய அறைகளில் முல்லா ஓமர் மறைந்திருந்துள்ளார்.
ஒரு சந்தர்ப்பத்தில், குறித்த இடத்தை ஐக்கிய அமெரிக்கப் படைகள் தேடியிருந்தபோதும், முல்லா ஓமரின் மறைவிடத்தை கண்டுபிடிக்கத் தவறியிருந்தன என குறித்த புத்தக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர், 1,000 அளவான படைகளைக் கொண்ட இன்னொரு ஐக்கிய அமெரிக்க தளத்துக்கு மூன்று மைல்கள் தொலைவிலுள்ள இரண்டாவது கட்டடமொன்றுக்கு முல்லா ஓமர் மாறியுள்ளார். இதுதவிர, கூறப்பட்டிருந்தது போல, தனது மறைவிடங்களிலிருந்து தலிபான்களை முல்லா ஓமர் இயக்கியிருக்கவில்லை.
எவ்வாறெனினும், ஆப்கானிஸ்தானிலுள்ள நீண்ட காலப் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகளில், தலிபான் தலைவர்களுடன் ஐக்கிய அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தும் கட்டாரிலுள்ள தலிபான்களின் அலுவலகமொன்றை முல்லார் ஓமர் அனுமதித்திருந்ததாகக் கூறப்படுகிறது. 2001ஆம் ஆண்டு டிசெம்பரில், தனது பாதுகாப்பமைச்சரான முல்லா ஒபைடுல்லாவிடம் தலிபான்களின் கட்டுப்பாட்டை முல்லா ஓமர் அளித்துள்ளார்.
இதுதவிர, சில வேளைகளில் நீர்க் குழாய்களில் முல்லா ஓமர் ஒழிந்திருந்ததாகவும், தனியே வசித்ததாகவும் தனது பாஷையைக் கண்டுபிடித்தாகவும் 2013ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் திகதி இறந்ததாகவும் புதைகுழியொன்றில் புதைக்கப்பட்டதாகவும் குறித்த புத்தகத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது
38 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago