Editorial / 2019 மார்ச் 13 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு சிரியாவிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் இறுதியிடமான பக்கூஸின் மீது வான், ஆட்லறித் தாக்குதல்கள், நேற்று முன்தினம் பொழியப்பட்டிருந்தன.
ஈராக்கிய எல்லைக்கருகிலுள்ள பக்கூஸ், றொக்கெட்டுகளால் இலக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில், இருளிலிருந்து தீப்பிழம்புகள் தோன்றியதுடன், கடுமையான துப்பாக்கி மோதலை உணரக்கூடியதாக இருந்ததுடன், கிளரொளியானது, இரவு வானத்தை ஒளிரச் செய்திருந்தது.
இந்நிலையில், ஸ்னைப்பர் தாக்குதலையும் நிலக்கண்ணிவெடிகளையும் தமது போராளிகள் எதிர்கொள்வதாகத் தெரிவித்த ஐக்கிய அமெரிக்க ஆதரவிலான சிரிய ஜனநாயகப் படைகள், இழப்புகளைத் தவிர்ப்பதற்காக மெதுவாக முன்னேறுவதாகவும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் தீவிரமான வெளிநாட்டு ஆயுததாரிகள், இன்னும் பக்கூஸைக் கட்டுப்படுத்துவாகக் கூறியுள்ளது.
இதேவேளை, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் களஞ்சியங்களையும் வாகனங்களையும் வான் தாக்குதல்கள் அழித்ததாக, சிரிய ஜனநாயகப் படைகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், பக்கூஸினுள் இன்னும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் சிரேஷ்ட தலைவர்கள் உள்ளார்கள் என ஐக்கிய அமெரிக்கா நம்பவில்லை என தன்னை அடையாளங்காட்ட விரும்பாத ஐக்கிய அமெரிக்க பாதுகாப்பு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தாக்குதல், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்ததிலிருந்து, ஐ.எஸ்.எஸ் ஆயுததாரிகள் பலர் கொல்லப்பட்டதாக அல்லது காயமடைந்ததாக சிரிய ஜனநாயகப் படைகளின் தளபதி அட்னான் அஃப்ரின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நான்கு தற்கொலைத் தாக்குதல்களை நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் ஆயுததாரிகள் முயன்றதாகவும ஆனால், ஆயுதக் கிடங்கொன்றை சிரிய ஜனநாயகப் படைகள் கைப்பற்றியதாக, சிரிய ஜனநாயகப் படைகளின் ஊடக அலுவலகத்தின் தலைவர் முஸ்தபா பாலி தெரிவித்துள்ளார். சிரிய ஜனநாயகப் படைகளின் போராளியொருவர் கொல்லப்பட்டதோடு, நால்வர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, பக்கூஸிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை எவரும் வெளியே வராத நிலையிலேயே தாக்குதல் ஆரம்பித்திருந்த நிலையில், சிறுவர்கள், பெண்கள் உள்ளடங்கலாக 100 பேரளவான குழுவொன்று பக்கூஸிலிருந்து வெளியே வந்துள்ளது
36 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago