Editorial / 2019 மார்ச் 28 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட சிரியாவில், குர்திஷ் படைகளின் மீது தாக்குதலொன்றை கடந்த திங்கட்கிழமை இரவு மேற்கொண்டதாக ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் இறுதியிடமான பக்கூஸை கடந்த சனிக்கிழமை ஐக்கிய அமெரிக்க ஆதரவுடனான சிரிய ஜனநாயகப் படைகள் கைப்பற்றியதாக அறிவித்த பின்னர், தாம் தாக்குதலை மேற்கொண்டதாக ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு தெரிவித்த முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்தது.
இந்நிலையில், மன்பிஜியின் நுழைவாயிலுள்ள சோதனைச்சாவடியொன்று மீதான பயங்கரவாதத் தாக்குதலொன்றில், கடமையிலிருந்த ஏழு போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாக மன்பிஜி இராணுவ சபையின் பேச்சாளர் ஷர்ஃபான் டர்விஷ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிரிய ஜனநாயகப் படைகளின் அங்கத்தவர்களே கொல்லப்பட்டதாக ஐக்கிய அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மேற்கு மன்பிஜியிலுள்ள குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சியின் சோதனைச்சாவடியொன்றை இயந்திரத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி தமது படைவீரர்கள் தாக்கி, ஒன்பது போராளிகளைக் கொண்டதாக அறிக்கையொன்றில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு தெரிவித்துள்ளது.
துருக்கிய எல்லையிலிருந்து 30 கிலோ மீற்றர் தூரத்தில் காணப்படுகின்ற மன்பிஜியானது முக்கியமான இடமாகக் காணப்படுகிறது. இது, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவிடமிருந்து குர்திஷ் வை.பி.ஜியால் தலைமை தாங்கப்படும் சிரிய ஜனநாயகப் படைகளுக்கு ஆதரவளிக்கும் சிரிய ஆயுதக்குழுவொன்றால், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவிடமிருந்து 2016ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்டிருந்தது
23 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago