Editorial / 2018 ஏப்ரல் 26 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடகொரியாவின் மனித உரிமைகள் தொடர்பில், ஐக்கிய அமெரிக்கா வெளியிட்ட குற்றச்சாட்டை, வடகொரியா கண்டித்துள்ளது. வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னுக்கும் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன்னுக்கும் இடையிலான சந்திப்பு, நாளை (27) இடம்பெறவுள்ள நிலையிலேயே, அதற்கு முன்னதாக இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீதிக்குப் புறம்பான கொலைகள், எதிர்ப்புகளை அடக்குதல், வெளிநாட்டுப் பிரஜைகளைக் கடத்துதல் உட்பட, அரச ஆதரவுபெற்ற வகையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக, வடகொரியா மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.
ஐ.அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தால் கடந்த வாரம் வெளியிடப்பட்ட வடகொரியா மீதான அறிக்கையில், “பாரியளவிலான மனித உரிமைகள் மீறல்கள்” இடம்பெறுகின்றன எனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. பகிரங்கமாக இடம்பெறும் மரண தண்டனைகள் அல்லது கொலைகள் முதல், பிரஜைகளை வேவுபார்த்தல் என, வடகொரியாவின் உரிமை மீறல்கள் காணப்படுகின்றன என, அவ்வறிக்கை தெரிவித்திருந்தது.
எனினும், தற்போது இவ்வறிக்கையை நிராகரித்து, அதைக் கண்டித்துள்ள வடகொரியா, தங்களுடைய தேசத்தை, மோசமாகப் பழிதூற்றும் வகையில் அவ்வறிக்கை அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது. அத்தோடு, ஐ.அமெரிக்காவில் காணப்படும் துப்பாக்கிக் கலாசாரத்தைச் சுட்டிக்காட்டிய வடகொரியா, “புற்றுநோய் போன்று” அந்நிலைமை காணப்படுகிறது எனவும், அனைத்து வகையான அநீதிகளும் உரிமைகளை வழங்காமையும் ஐ.அமெரிக்காவில் காணப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது.
“மனித உரிமைகளுக்கான நீதிபதி” போன்று, தன்னை நிலைநிறுத்திக் கொள்ள, ஐ.அமெரிக்கா முயல்கிறது எனக் குற்றஞ்சாட்டிய, வடகொரிய அரச ஊடகம், “இது மிகவும் கேலிக்குரியது என்பதோடு, கள்வனொருவனை நிறுத்துமாறு, இன்னொரு கள்வன் அழுவது போன்றது” எனவும் குறிப்பிட்டது.
34 minute ago
55 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
55 minute ago
9 hours ago