Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2023 ஜூலை 26 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
சந்திராயன்-3 விண்கலம் கடந்த ஜூலை 14 ஆம் திகதி நிலவை நோக்கி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியின் சுற்றுப்பாதையில் சுற்றிவரும் இந்த சந்திராயன்-3 விண்கலத்தை 4 முறை சுற்றுப்பாதைகளுக்கு உயர்த்தப்பட்ட நிலையில் 5-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்த திட்டமிடப்பட்டிருந்தது.
அதன்படி சந்திராயன்-3 விண்கலத்தின் நிலவை நோக்கிய பயணத்தில் 5-வது சுற்றுவட்டப்பாதைக்கு வெற்றிகரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.
விண்கலம் நிலவை நோக்கி உயர்த்தப்பட்டதில் 236 கிலோ மீட்டர் சுற்றுப்பாதையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என ட்விட்டரில் இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் சந்திராயனின் அடுத்த உயர்த்துதல் ஆகஸ்ட் 1 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் 1 மணிக்குள் திட்டமிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago