Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Ilango Bharathy / 2022 நவம்பர் 17 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுண்ணறிவு திறனில் அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாவ்கிங்கை பின்னுக்குத் தள்ளி பிரித்தானியாவைச் சேர்ந்த `யூசுஃப் ஷா` என்ற சிறுவன் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஹாவ்கிங் ஆகியோரின் நுண்ணறிவு திறன் அளவீட்டு எண் 160 ஆக இருக்கும் நிலையில், 11 வயதான இச்சிறுவனின் நுண்ணறிவு திறன் அளவீட்டு எண் 162 ஆக அளவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் “எவ்வளவு தான் திறமைசாலியாக இருந்தாலும் கடின உழைப்பு முக்கியம் என்பதை தனது மகனுக்கு அறிவுறுத்தி வருவதாக” யூசுஃப் ஷாவின் தந்தை இர்ஃபான் தெரிவித்துள்ளார்.
மேலும் வரும் காலத்தில் யூசுஃப் கேட்பிரிட்ஜ் அல்லது ஒக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் கணிதம் படிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூளைக்கு வேலை கொடுக்கும் எந்த சவாலான வேலையையும் செய்ய எப்போதும் தான் விருப்பத்துடன் தயாராக இருப்பதாகவும் கூறும் யூசுஃப், எண்ணியல் குறுக்கெழுத்திற்கு விடை காண்பதிலும், ரூபிக் கியூபை கையாள்வதிலும் எப்போதும் தான் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago