Editorial / 2019 மே 09 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய தேர்தல்களுக்கு முன்னர், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுகின்ற (பிரெக்சிற்) ஒப்பந்தமானது இணங்கப்பட்டு விடும் என பிரித்தானியா அரசாங்கம் எதிர்பார்க்கின்றபோதும், ஐரோப்பிய தேர்தல்களை பிரித்தானியா நடத்த வேண்டும் என பிரித்தானிய அமைச்சரவை அலுவலகத்தின் அமைச்சர் டேவிட் லிடிங்டன் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பியத் தேர்தல்களுக்கான வாக்களிப்பானது எதிர்வரும் 23ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், முதலில் பிரெக்சிற் ஒப்பந்தத்துக்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணங்கினால், ஐரோப்பிய தேர்தல்களில் பிரித்தானியா பங்கேற்கத் தேவையில்லை எனப் பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஐரோப்பிய தேர்தல் வாக்களிப்புத் தினத்துக்கு முன்னர், பிரெக்சிற் ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணங்கும் நடைமுறையை முடித்துக் கொள்வது சாத்தியமில்லை என வருத்தத்துடன் தற்போது தெரிவித்துள்ள டேவிட் லிடிங்டன், சட்டரீதியாக ஐரோப்பிய தேர்தல்களில் பிரித்தானியா பங்கேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இவ்வாண்டு மார்ச் 29ஆம் திகதி பிரித்தானியா வெளியேறுவதாக இருந்தபோதும், பிரித்தானியா நாடாளுமன்றத்தில் எந்தவொரு ஒப்பந்தமும் இணங்கப்படாத நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதை இவ்வாண்டு ஒக்டோபர் 31ஆம் திகதி வரை ஐரோப்பிய ஒன்றியம் நீடித்திருந்தது.
குறித்த திகதிக்கு முன்னரும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறலாம் என்றபோதும், இம்மாதம் 23ஆம் திகதிக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறாவிட்டால், ஐரோப்பிய ரீதியாக இடம்பெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரித்தானியா பங்கேற்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
34 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
1 hours ago