Freelancer / 2021 டிசெம்பர் 19 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒமிக்ரான் மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாளை (20) முதல் நான்கு வாரங்களுக்கு நாட்டை முடக்குவதற்கு நெதர்லாந்து தீர்மானித்துள்ளது.
ஏற்கெனவே இஸ்ரேல் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள், ஒமிக்ரான் அச்சத்தால் தமது நாட்டின் எல்லைகளை மூடியிருந்த நிலையில் தற்போது நெதர்லாந்தும் மூடுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
டெல்டா மாறுபாட்டை விட ஒமிக்ரான் கடும் வேகமாக பரவுகிறது என்று உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்திருந்ததுடன், ஒவ்வொரு ஒன்றரை முதல் மூன்று நாட்களுக்கு நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய இராச்சியத்திலும் அதிக எண்ணிக்கையிலான ஒமிக்ரான் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதால், தலைநகரில் ஒமிக்ரான் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதை ஒரு முக்கிய விடயமாக அறிவிக்க லண்டன் மேயர் சாதிக் கான், நேற்று நடவடிக்கை எடுத்தார்.
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 90,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளதுடன், இது முந்தைய வாரத்தை விட 67% அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிய மாறுபாட்டைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்த மாத இறுதிக்குள் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 600,000 முதல் 2 மில்லியனாக உயரக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
34 minute ago
2 hours ago
5 hours ago
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago
5 hours ago
14 Dec 2025