Freelancer / 2022 ஏப்ரல் 12 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரேன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில்,உக்ரேன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகங்களில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
ஒரு பகுதியில் ரஷ்ய படைகள் பின்வாங்கினாலும் மற்றுமொரு பகுதியில் தனது ருத்ரதாண்டவத்தை காட்டுகின்றன.
ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு உக்ரேன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன.
இதற்கிடையில், உக்ரேனின் தலைநகர் கீவ் அருகே உள்ள புச்சா நகரில் பொதுமக்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட உடல்கள் சாலையில் கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகி உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தலைநகர் கீவ் அருகே உள்ள நகரங்களில் கொன்று புதைக்கப்பட்ட 1,200-க்கும் மேற்பட்டோரின் உடல்களை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உக்ரேன் தெரிவித்துள்ளது.
ரஷ்ய படைகள் பொதுமக்களை கொன்று உடல்களை ஒரே இடத்தில் மிகப்பெரிய பள்ளத்தை தோண்டு அதில் புதைத்துள்ளதாக உக்ரேன் குற்றஞ்சாட்டியுள்ளது. (R)
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago