Freelancer / 2022 ஓகஸ்ட் 25 , பி.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுவந்த இத்தாலியருக்கு ஒரே நேரத்தில் கொரோனா, குரங்கம்மை, எச்ஐவி பாதிப்பு கண்டறியப்பட்டது.
தொண்டை வலி, சோர்வு மற்றும் தலைவலி ஆகிய அறிகுறிகளை கொண்ட 36 வயதான நபர் சோதனை செய்தபோது, அவருக்கு ஒரே நேரத்தில் COVID-19, குரங்கம்மை மற்றும் எச்ஐவி இருப்பது கண்டறியப்பட்டது.
அறிகுறிகள் தோன்றிய மூன்று நாட்களுக்குப் பிறகு முதலில் அவர் COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நபர் ஜனவரி மாத தொடக்கத்தில் கொரோனா சோதனை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் அவரது உடலில் தடிப்புகள் மற்றும் கொப்புளங்கள் தோன்றிய பிறகு, சுகாதார அதிகாரிகள் கூத்துதலாக சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது, அவருக்கு குரங்கம்மை, கோவிட்-19 மற்றும் எச்.ஐ.வி மூன்றும் இருப்பது தெரியவந்தது.
இந்த வழக்கை விசாரிக்கும் ஆராய்ச்சியாளர்கள் ஜர்னல் ஆஃப் இன்ஃபெக்ஷனில் "குரங்கம்மை மற்றும் கோவிட்-19 அறிகுறிகள் ஒன்றுடன் ஒன்று சேரலாம்" என்றும் "பாலியல் உடலுறவுதான் இது பரவுவதற்கான முக்கிய வழியாகும்" என்றும் வெளிப்படுத்தினர்.
அதேசமயம், நோயாளியின் எச்.ஐ.வி பாதிப்பு "ஒப்பீட்டளவில் சமீபத்தியதாக" இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
அந்த நபர் ஜூன் மாதம் ஸ்பெயினில் ஐந்து நாட்கள் தங்கியிருந்தார், ஜூலை 2 அன்று அவருக்கு COVID-19-க்கு நேர்மறை சோதனை செய்யப்பட்டது. அவர் ஸ்பெயினில் தங்கியிருந்த போது ஆண்களுடன் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்டது ஆய்வில் தெரியவந்துள்ளது. (R)
7 minute ago
18 minute ago
25 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
25 minute ago
44 minute ago