Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2023 ஓகஸ்ட் 01 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜப்பானை சேர்ந்த யூடியூப்பர் ஒருவர் நாய் போன்ற உடை அணிந்து பூங்காவில் வலம் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இந்நிலையில் ஓநாய் போன்ற தோற்றத்தில் ஒருவர் உலா வரும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. டோருஉவேடா என்ற அந்த என்ஜினீயருக்கு சிறு வயது முதலே ஓநாய்கள் மீது அதிக பற்று உண்டாம். எனவே தானும் ஓநாயை போல மாற வேண்டும் என ஆசைப்பட்ட அவர் இந்திய மதிப்பில் ரூ.20 லட்சம் செலவு செய்து ஓநாய் போன்ற தோற்றத்தில் ஆடையை வடிவமைத்து பெற்றுள்ளார்.
ஓநாய் உடையில் அவர் நடந்து வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து உவேடா கூறுகையில், நான் மனித உறவுகளில் இருந்து விடுபட்டுள்ளேன். வேலை மற்றும் பிற செயற்பாடுகள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் மறக்க இது உதவுகிறது. இந்த உடை அணிவது பவர்புல் அனுபவமாக இருக்கிறது. கண்ணாடியில் இந்த உடையை பார்க்கும் போது நான் ஒரு ஓநாயை பார்ப்பது போலவே உள்ளது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago