S.Renuka / 2026 பெப்ரவரி 04 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜப்பானில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. இதில் சிக்கி கடந்த 2 வாரங்களில் 30 பேர் பலியாகி உள்ளனர். 290 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் 300 செ.மீ. ஆழ பனியில் வீட்டுக்கு வெளியே 91 வயது மூதாட்டி ஒருவர் புதைந்து பலியாகியுள்ளார்.

இதனால், பிரதமர் சனே தகைச்சி, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடும்படி படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கட்டிட மேற்கூரைகளில் இருந்து பனி சேர்ந்து விழ கூடிய ஆபத்தும், பனிச்சரிவுக்கான சாத்தியமும் உள்ளது என மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
1986-ம் ஆண்டு 40 வருடங்களுக்கு முன்பு 181 செ.மீ. என்ற அளவில் பனிப்பொழிவு இருந்தது. அதனை முறியடிக்கும் வகையில், 183 செ.மீ. என்ற அளவுக்கு பனிப்பொழிவு உள்ளது.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026