2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கட்டாரிடம் கை நீட்டியதால் கைது

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 15 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாரில் வெளிநாட்டு தொழிலாளா்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும், இவ்விவகாரத்தில் ஐரோப்பிய கூட்டமைப்பு தங்களுக்கு ஆதரவான அரசில் முடிவுகளை எடுப்பதற்கு கட்டார் பணபலத்தை பயன்படுத்தி வருவதாகவும் நீண்ட காலமாகவே குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

ஆனால் இதனை கட்டார்  அரசு திட்டவட்டமாக மறுத்து வந்தது. இந்நிலையில் கட்டாரிடம் லஞ்சம்  பெற்றதாக கூறி ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பெண் தலைவரான எவா காயிலி உட்பட 4 பேரை கைது செய்துள்ள பொலிஸார் அவர்கள் மீது சட்டவிரோத பண பரிவா்த்தனை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீடு உட்பட 16 இடங்களில் பொலிஸார் சோதனை நடத்தி சுமார் 6 லட்சம் யுரோக்களைப் பறிமுதல் செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற அலுவலகங்களில் பொலிஸார் சோதனை நடத்தினர்.

இதனிடைய லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கிரீஸ் நாட்டை சேர்ந்த எவா காயிலி ஐரோப்பிய நாடாளுமன்ற துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .