Editorial / 2026 ஜனவரி 25 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடாமீது 100 சதவீதம் வரி விதிக்கப்போவதாய் மிரட்டியிருக்கிறார்.
சீனாவுடன் கனடா வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டால் வரி உடனடியாக விதிக்கப்படும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.
சீனா, கனடாவுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
கனடாவின் வர்த்தகங்கள், சமூகம், அன்றாட வாழ்க்கை உள்ளிட்ட அம்சங்களை சீனா அழித்துவிடும் என்று டிரம்ப் தமது Truth Social பக்கத்தில் பதிவிட்டார்.
அண்மையில் சீனாவுக்குச் சென்றிருந்த கனடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) அந்நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துக்கொள்ள இணக்கம் எட்டப்பட்டுள்ளதாகச் சொன்னார். அதற்கு டிரம்ப் அப்போது ஆதரவளித்திருந்தார்.
17 minute ago
27 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
27 minute ago
47 minute ago