2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கனடாவில் கத்திக்குத்து: 10 பேர் பலி

Freelancer   / 2022 செப்டெம்பர் 05 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடாவின் மத்திய சஸ்கட்செவன் மாகாணத்தில் நேற்று இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

அந்த மாகாணத்தின் ரஜினா நகரில் உள்ள ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன், வெல்டன், சஸ்கடன் ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன் மற்றும் வெல்டன் உள்ளிட்ட 13 இடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை தேடி வருவதாக றோயல் கனடியன் மவுண்டட் போலிஸ் உதவி ஆணையர் ரோண்டா பிளாக்மோர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலை நடத்திய சந்தேக நபர்கள் தொடர்பில் கனேடிய பொலிஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கமைய 31 வயதான டேமியன் சாண்டர்சன் மற்றும் 30 வயதான மைல்ஸ் சாண்டர்சன் ஆகியோர் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X