Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Janu / 2023 ஜூலை 24 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் பல நாடுகளுக்கு கோதுமை, பார்லி, சோளம், சூரியகாந்தி எண்ணெய் உள்பட பல அத்தியாவசியமான உணவு பொருட்களை உக்ரேன் ஏற்றுமதி செய்து வந்தது. இந்நிலையில், உக்ரேன் நேட்டோ அமைப்பில் சேர எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தது. போரை தொடர்ந்து உக்ரேனின் ஏற்றுமதி பணிகள் தடைப்பட்டு, உலக அளவில் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஐ.நா. மற்றும் துருக்கியின் முயற்சியால், ரஷியா- உக்ரேன் நாடுகளுக்கு இடையே "கருங்கடல் தானிய ஒப்பந்தம்" ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி, ஆயுதங்கள் ஏதும் இல்லையென பரிசோதித்து உறுதி செய்த பின் உக்ரேனின் 3 துறைமுகங்களிலிருந்து உணவு பொருட்களை ஏற்றுமதி செய்ய ரஷ்யா ஒப்புதல் அளித்தது.
ஏற்கெனவே இந்த ஒப்பந்தம் இரு முறை புதுப்பிக்கப்பட்டது. தற்போது உடன்படிக்கை காலாவதியான நிலையில், அதனை புதுப்பிக்க ரஷ்யா மறுத்து விட்டது. ஒப்பந்ததின் விதிமுறைகளை உக்ரேன் பின்பற்ற வில்லை என ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
ரஷ்யாவின் விவசாய ஏற்றுமதிகளை மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகள் தடுத்து வைத்திருப்பதாகவும், இந்த தடைகளை நீக்கினால் மட்டுமே கருங்கடல் ஒப்பந்தத்தில் மீண்டும் பங்கேற்க முடியும் என்று ரஷ்யா நிபந்தனை விதித்துள்ளது.
இதனால் உலக அளவில் உணவு பொருட்களுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இது குறித்து கவலை தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்ரெஸ், ஒப்பந்தத்தில் மீண்டும் ரஷ்யா இணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த பிரச்சினையை களைய ஐ.நா எடுக்கும் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர தூதர் ருசிர காம்போஜ் தெரிவித்துள்ளார். ரஷ்யா, உணவை போருக்கான ஆயுதமாக பயன்படுத்துவதாக அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago