2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

கர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவர்; காரணம் தெரிந்தால் அதிர்ச்சி அடைவீர்கள்

Ilango Bharathy   / 2022 ஜூலை 13 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் மிசூரி மாகாணத்தில் வசித்து வந்த 31 வயதான பியூ ரோத்வெல் என்பவர், 6 வார கர்ப்பிணியான தனது மனைவி ஜெனிபரைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளதுடன், அதன் பின்னர் தன் மனைவி காணாமல் போனதாகப் பொலிஸாரிடமும் புகார் தெரிவித்துள்ளார். 
 
இதனைத்தொடர்ந்து ஒரு வாரம் கழித்து ஜெனிபரின் உடல் கண்டறியப்படவே, இது குறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.  
 
விசாரணையில் அவருக்கு வேறு பெண்ணுடன் இருந்த தொடர்பு பற்றி ஜெனிஃபர் கேட்ட பின்பு, ஏற்பட்ட மோதலால் மனைவியை அடித்ததாகவும் திட்டமிட்டு கொலை செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.
 
ஆனால் ஜெனிபர் கொலை செய்யப்படுவதற்கு முன், பியூ ரோத்வெல் தன் காதலி உடன் பகிர்ந்து கொண்ட குறுஞ்செய்திகள் சேகரிக்கப்பட்டன. அதன்படி அவர் தன் மனைவியைத் திட்டமிட்டு கொலை செய்தமை உறுதியானது.
 
எனவே, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .