2025 டிசெம்பர் 13, சனிக்கிழமை

’கோல்டு கார்ட்’ விசாவை அறிமுகப்படுத்திய ட்ரம்ப்

S.Renuka   / 2025 டிசெம்பர் 11 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

1 மில்லியன் டொலர் 'கோல்டு கார்ட்' விசாவை, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிமுகப்படுத்தினார். இந்த விசா அமெரிக்க நிறுவனங்கள் திறமையானவர்களை தக்க வைத்து கொள்ள அனுமதிக்கிறது.

அமெரிக்காவுக்கு சென்று வேலை பார்ப்பதற்கென பல வகையான விசாக்கள் வழங்கப்படுகின்றன. இவற்றில் மிகவும் முக்கியமானது எச்1பி விசா. இதை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. 

இவ்வாறு விசா பெற்று அங்கு சென்று வேலை பார்ப்போருக்கு, அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்காக, 'கிரீன் கார்ட்' என்ற அந்தஸ்து வழங்கப்படுகிறது.

தற்போது அமெரிக்காவில் வசிக்கவும், வேலை பார்க்கவும், 'கோல்டு கார்ட்' விசாவை ஜனாதிபதி ட்ரம்ப்  அறிமுகப்படுத்தியுள்ளார். 

இது வெளிநாட்டினர் அமெரிக்க அரசிற்கு 1 மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்குவதன் மூலம நிரந்தரமாக தங்கும் அந்தஸ்தைப் பெற அனுமதிக்கிறது. 

இது குறித்து ஜனாதிபதி ட்ரம்ப்  கூறியதாவது: 

ஓரளவுக்கு ஒரு 'கிரீன் கார்ட்' போன்றது. ஆனால், கிரீன் கார்டை விட பெரிய நன்மைகளை கொண்டுள்ளது, என்றார்.

விண்ணப்ப காலக்கெடு

செயலாக்கக் கட்டணம் சமர்ப்பிக்கப்பட்டவுடன், சரிபார்ப்பு மற்றும் ஒப்புதல் செயல்முறைக்கு ஒரு வாரங்கள் ஆகும். விண்ணப்பதாரர்கள் விசா நேர்காணலில் கலந்து கொண்டு ஆவணக் கோரிக்கைகளுக்கு விரைவாக பதிலளிக்க வேண்டும். 'கோல்டு கார்ட்' விசாவை வைத்திருப்பவர்களுக்கு அமெரிக்க நிரந்தர குடியிருப்பாளர்களைப் போலவே வரி விதிக்கப்படுகிறது.

எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பங்கள் https://trumpcard.gov/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் சமர்ப்பிக்கப்படுகின்றன.

இரத்து செய்ய முடியுமா?

எந்தவொரு விசாவையும் போலவே, தேசிய பாதுகாப்பு அல்லது குற்றவியல் சம்பவங்கள் ஈடுபட்டால் 'கோல்டு கார்ட்' விசாவை இரத்து செய்யப்படலாம்.

குடும்ப உறுப்பினர்கள்

21 வயதுக்குட்பட்ட வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் திருமணமாகாத குழந்தைகள் விண்ணப்பத்தில் சேர்க்கப்படலாம்.

ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 15 ஆயிரம் டொலர் செயலாக்கக் கட்டணமும், விசாவை பெற 1 மில்லியன் டொலரும் நன்கொடையாக செலுத்த வேண்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X