Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஒக்டோபர் 08 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி தினம், இனி விடுமுறை பட்டியலில் சேர்க்கப்படுவதாக அம்மாகாண கவர்னர் கவின் நியூசம் அறிவித்துள்ளார்.
இது இந்தியாவின் தீபாவளி பண்டிகையை, விடுமுறையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த அமெரிக்காவின் மூன்றாவது மாகாணமாகும்.
ஏற்கனவே 2024-ல் பென்சில்வேனியாவும், 2025-ல் கனெக்டிகட் மாகாணங்கள் தீபாவளியை அரசு விடுமுறையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்திருந்தன.
இந்த விடுமுறை மூலம் அரசு பொது கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் கலிபோர்னியாவின் சட்டப்பேரவையின் இரு அவைகளிலும் தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவிக்கும் 'ஏபி 268' என்ற மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா கவர்னர் கவின் நியூசம் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறையாக அறிவிக்கும் 'ஏபி 268' என்ற மசோதாவுக்கு கவின் நியூசம் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்.
இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்ததற்காக கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசமை இந்திய அமெரிக்க மற்றும் இந்து சமூகங்கள் பாராட்டியுள்ளன.
இந்திய வம்சாவளி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆஷ் கல்ரா மற்றும் டாக்டர் தர்ஷனா படேல் ஆகியோர் இணைந்து இந்த மசோதாவை எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago