Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Mithuna / 2023 டிசெம்பர் 14 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
போப் பிரான்சிஸ் அவருடைய கல்லறையை தேர்வு செய்திருக்கிறார். ஆனால் அது, இதற்கு முன் போப் பதவி வகித்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட வத்திக்கான் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா அல்ல.
87 வயதுடைய பிரான்சிஸ், ரோம் நகரில் உள்ள சான்டா மரியா மேகியோர் பசிலிக்காவில் தன்னுடைய உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என விரும்புகிறேன் என்று வியாழக்கிழமை (14) வெளியான பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
இதனால், நூறாண்டுகளுக்கு பின் வத்திக்கான் நகருக்கு வெளியே அடக்கம் செய்யப்படும் முதல் போப் ஆகிறார். கடந்த 1903-ம் ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ் தவிர்த்து வேறிடத்தில் அடக்கம் செய்யப்பட்டவர் போப் லியோ 8 ஆவார். அவருடைய உடல் ரோமில் உள்ள செயின்ட் ஜான் பசிலிக்காவில் அடக்கம் செய்யப்பட்டது.
போப் ஆவதற்கு முன்பு, ரோம் நகருக்கு பிரான்சிஸ் செல்லும்போது, ஒரு ஞாயிற்றுக்கிழமை தினத்தில் சான்டா மரியா மேகியோர் பசிலிக்காவுக்கு செல்வது வழக்கம்.
2013-ம் ஆண்டு போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும், அறுவை சிகிச்சை செய்த பின்பும் அவர் ரோமிற்கு சென்று பசிலிக்காவில் வழிபட்டிருக்கிறார்.
இதற்கு முன் வத்திக்கானி் உள்ள பசிலிக்காவில் 7 போப்புகள் அடக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர் என வாடிகனின் அதிகாரப்பூர்வ ஊடக தகவல் தெரிவிக்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
19 minute ago
30 minute ago
2 hours ago