Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Ilango Bharathy / 2022 ஜூன் 07 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் பலவற்றில், பாடசாலை மற்றும் பல்கலைக் கழக மாணவர்கள் வீட்டில் இருந்தவாறே தமது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த பிரான்செஸ்கா போர்டியர் (Francesca Bourdier) என்ற மாணவியொருவர் , நேரலை மூலம் பல்கலைக் கழகமொன்றில் பட்டப்படிப்பை முடித்த நிலையில், அவருடன் சேர்ந்து அவரது பூனை சுகி( Suki) பட்டம் பெற்றுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் ”எனது பூனையும் என்னுடன் சேர்ந்து, ஒரு நேரலை வகுப்பினைக் கூடத் தவற விடாமல், அனைத்திலும் கலந்து கொண்டது. இதனால், எனது பல்கலைக் கழத்தில் இருந்து நாங்கள் இருவரும் பட்டம் பெற்றுள்ளோம்" என்றார்.
இந்நிலையில் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
53 minute ago
2 hours ago
2 hours ago