Ilango Bharathy / 2022 பெப்ரவரி 01 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவில் இன்றையதினம் (01) புத்தாண்டு மலர்ந்துள்ள நிலையில் அங்கு புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டிவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் 12 மிருகங்களின் பெயரில் வருட பிறப்பை கொண்டாடிவருகின்றனர். 12 ஆண்டுகள் முடிந்தவுடன் மீண்டும் அதே சுழற்சி ஆரம்பமாகும். அதன்படி நேற்றைய தினம் எருது வருடம் முடிவடைந்து, இன்று புலி வருடம் ஆரம்பித்துள்ளது.

அந்நாட்டுக் கலாச்சாரத்தின் படி, புலி, வலிமை மற்றும் தைரியம் இரண்டையும் குறிக்கிறது. அதன்படி இந்த புதிய வருடம் துயரத்திலிருந்து மக்களை மீட்டு அமைதியை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
மேலும் இதனையொட்டி உலக நாடுகளில் இருக்கும் லட்சக்கணக்கான சீன நாட்டு மக்கள், புது வருடத்தை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தற்போது கொரோனாத் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையிலும் பிற நாடுகளிலிருந்து சீனாவிற்கு செல்லக்கூடிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026