Editorial / 2025 டிசெம்பர் 30 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாகவே பதற்றம் மீண்டும் அதிகரித்துவிட்டது. அங்கு இத்துகளைக் குறிவைத்து நடக்கும் வன்முறைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு நள்ளிரவு நேரத்தில் இந்துக்கள் வசிக்கும் 5 வீடுகளை மர்ம நபர்கள் தீவைத்துக் கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. அங்குக் கடந்தாண்டு ஏற்பட்ட வன்முறையில் ஹசீனா ஆட்சி தூக்கி எரியப்பட்டது. பல மாதங்களுக்கு பிறகே அங்கு மெல்ல அமைதி திரும்பி வந்தது. இந்தச் சூழலில் தான் அங்கு இப்போது மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளது. சிறுபான்மை சமூகத்தினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. அங்கு மீண்டும் அப்படியொரு மோசமான சம்பவம் வங்கதேசத்தில் நடந்துள்ளது.
அங்குள்ள பிரோஜ்பூர் மாவட்டத்தின் டும்ரிதலா கிராமத்தில் இந்து குடும்பத்தினர் குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளனர். அங்கு இந்து குடும்பங்கள் வாழ்ந்த ஐந்து வீடுகள் நேற்றைய தினம் தீக்கிரையாக்கப்பட்டன. வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த ஷாக் சம்பவம் நடந்துள்ளது.
வங்கதேசத்தில் மாணவர் தலைவர் கொலையைத் தொடர்ந்து மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில், இதுபோல சிறுபான்மை இந்துக்கள் மீதான தாக்குதலும் அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் 18ம் தேதி மயமன்சிங்கில், 29 வயதான தொழிலாளி தீபு சந்திர தாஸ் என்பவர் கொல்லப்பட்டார். அவர் நபிகள் நாயகத்தை அவமதித்ததாகச் சொல்லி படுகொலை செய்யப்பட்டார். இருப்பினும், அவர் நபிகள் நாயகத்தை அவமதித்ததற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை.
இந்தச் சம்பவம் நடந்து ஒரே வாரத்தில் இப்போது மீண்டும் இந்துக்களின் வீடுகள் அங்குத் தீக்கிரையாக்கப்பட்டன. தீ வேகமாகப் பரவ வேண்டும் என்பதற்காக ஒரே இடத்தில் துணிகளைப் போட்டு, அங்கு தீ வைத்துள்ளனர். துணியில் எளிதாகத் தீப்பற்றிய நிலையில், அது வேகமாகப் பரவியிருக்கிறது. இதன் காரணமாகவே அருகில் இருந்த 5 வீடுகளில் தீப்பற்றி இருக்கிறது. அங்குள்ள அடிப்படைவாத கும்பல் இந்தச் சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுக்கிறது.
17 minute ago
27 minute ago
41 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
27 minute ago
41 minute ago
46 minute ago