Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Ilango Bharathy / 2022 ஜூலை 20 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஃப்ளோரிடா பகுதியைச் சேர்ந்த மிட்செல் என்ற பெண் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர், தனது வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்ற போது, அவரது கழிப்பறைத் தொட்டியில் உடும்பு ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக இது குறித்து அவர் விலங்குகளைக் கைப்பற்றும் மையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன் படி, உடனடியாக அங்கு வந்த ஹெரால்டு ரோண்டோன் என்பவர், அந்த உடும்பை மீட்டு வெளியே எடுத்துச் சென்றார்.
இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஹெரால்டு” கடந்த நான்கு நாட்களில் இப்பகுதியை சுற்றியுள்ள வீட்டின் கழிவறையில் இருந்து, மூன்று உடும்புகளை கைப்பற்றி உள்ளதாகக்” குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டுமில்லாமல், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஊர்வன விலங்குகளை அங்குள்ள வீட்டின் கழிவறையில் இருந்தும் தான் கைப்பற்றியதாகவும் கூறியுள்ளார்.
மெக்ஸிகோ மற்றும் சென்ட்ரல் அமெரிக்கா பகுதியில் அதிகம் காணப்படும் இந்த உடும்பு, தற்போது ஃப்ளோரிடாவில் அதிகமாக காணப்பட்டு வருகிறது. இதற்கு காரணம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதிக்கு பல உடும்புகள் செல்லப் பிராணியாக வளர்க்க கொண்டு வந்ததாகவும், அதிலிருந்து தப்பித்த உடும்புகள், தற்போது இந்த மாதிரி சிக்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் கழிவறையின் மேல் கூரை மற்றும் அங்கே இருக்கும் துவாரங்களை சரி வர மூடி வைத்திருக்க வேண்டும் எனவும், கழிவறைக்கு சென்று உட்காரும் போது, சுற்றி பார்த்து விட்டு, பின் அமர வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 May 2025
18 May 2025
18 May 2025