Freelancer / 2024 ஜூலை 08 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் தீவிரமாக எரிந்துவரும் காட்டுத்தீ எல்டராடோ விமான நிலையத்திற்கும் பரவி இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டு தீ பலத்த காற்று காரணமாக அதிவேகமாக பரவி வருகிறது. ஏராளமான வனப்பகுதிகளை சாம்பலாக்கி விட்ட காட்டு தீ எல்டராடோ மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்திற்கும் பரவியது.
இதனால் விமான நிலையமே கரும்புகை மற்றும் தீ பிழம்புகளால் சூழப்பட்டுள்ளது. காட்டு தீ பரவலை தடுத்து நிறுத்த தீயணைப்பு படையினர் ஹெலிக்கொப்டர்கள் மற்றும் விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
விமான நிலையத்தில் ஏராளமான சிறிய வகை விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் தீ பரவாமல் தடுத்து நிறுத்தும் பணிகளில் மாகாண தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், விமான நிலையத்தின் வெளிப்புற பகுதிகளை தீ சூழ்ந்துள்ளதை அடுத்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.S
12 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago