2025 நவம்பர் 05, புதன்கிழமை

காணொளியில் சசிகலா வரலில்லை தள்ளிப்போனது வழக்கு விசாரணை

Editorial   / 2019 மே 14 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அந்நிய செலாவணி மோசடி வழக்கில், அ.தி.மு.கவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, காணொளி மூலமாக முன்னிலையாகாத நிலையில், குறித்த வழக்கு விசாரணையை, எதிர்வரும் 28ஆம் திகதிக்கு, உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சசிகலா, தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு, வெளிநாட்டில் மின்னணு பொருள்கள் வாங்கியதில், பல மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாக, அமலாக்கத் துறையினர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக, சசிகலா எழும்பூர் நீதிமன்றத்தில் காணொளி காட்சி மூலம் ஆஜராக வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. உயர்நீதிமன்றத்தின் ஆணை உரிய நேரத்தில் கிடைக்காததால், சசிகலா ஆஜராகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X