2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

காதலனுடன் நெருக்கமாக இருந்தால் 6 மாதங்கள் சிறை

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 19 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சூடானில் தற்போது இராணுவ ஆட்சி நடைபெற்று வருகின்றது. அதேசமயம்  அங்கு திருட்டு, விபச்சாரம் உள்ளிட்ட குற்றங்களுக்கு கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றுதல் அல்லது கைகளை துண்டித்தல் போன்ற கடுமையான தண்டனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் “ஒயிட்நைல் மாகாணத்தை சேர்ந்த விவாகரத்து பெற்ற இளம் பெண் ஒருவர், இளைஞர் ஒருவருடன் நெருங்கிப்  பழகி வந்துள்ள நிலையில், இருவரும் நெருக்கமாக இருந்ததை அப் பெண்ணின் உறவுக்காரர் ஒருவர் பார்த்து ஆத்திரமடைந்து  குறித்த இளைஞரைக் கொலை செய்துள்ளார்.

மேலும் திருமணத்திற்கு பின் கணவர் அல்லாமல் மற்றொரு ஆணுடன் நெருக்கமாக இருந்ததன் காரணத்தினால் அந்த பெண் மீது விபச்சார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது”

 இவ் வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த பெண்ணை கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டது

 ஆனால் இதற்கு சர்வதேச அளவுகள் எதிர்ப்புகள் வலுத்துள்ளதால்,  குறித்த தண்டனை வாபஸ் பெறப்பட்டு வழக்கு மறுவிசாரணை செய்யப்பட்டது.

இவ்விசாரணையின் போது அப் பெண் தனது காதலனுடன் நெருக்கமாக இருந்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து நீதிமன்றம் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .