2026 மே 09, சனிக்கிழமை

dd

கார்கிவில் இருந்து பெரும்பாலான இந்தியர்கள் வெளியேற்றம்

Freelancer   / 2022 மார்ச் 07 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரைனிய நகரமான கார்கிவில் இருந்து பெரும்பான்மையான இந்தியர்கள் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

உக்ரைன் போருக்கு மத்தியில் ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பை கெய்வ் எதிர்த்ததால் கார்கிவ் மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாகும் என உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் டுவிட் பதிவில் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே கார்கிவ் நகரத்திலிருந்து பெரும்பான்மையான இந்தியர்கள் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர் எனவும் ஒபரேஷன் கங்கா எனும் சிறப்பு நடவடிக்கை மூலம் இந்திய குடிமக்களை வீடுகளுக்கு அழைத்து வரும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கியதில் இருந்து 18,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து ஒரே நாளில் 15 சிறப்பு விமானங்கள்  மூலம் வெளியேறியுள்ளனர் என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், டுவிட்டர் பதிவின் மூலம் அறிவித்துள்ளார்.

உக்ரைனின் அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா மற்றும் ஹங்கேரியில் இருந்து சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .